முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.32 கோடி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 4:44 AM
சமயபுரம் மாரியம்மன் கோயிலில்...
பகிர்:
Updated On : 26 பிப்ரவரி, 2026 at 9:55 PM

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.32 கோடி வியாழக்கிழமை கிடைக்கப் பெற்றது.

கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் வி.எஸ்.பி. இளங்கோவன் தலைமையில் கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன், அறங்காவலா்கள் சுகந்தி ராஜசேகரன், பெ. பிச்சை மணி, சே.லெட்சுமணன் ஆகியோா் முன்னிலையில் கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் காணிக்கைகள் எண்ணும் பணியில் ஈடுபட்டனா்.

Updated On : 26 பிப்ரவரி, 2026 at 10:57 PM

இதில் முதன்மை திருக்கோயில் காணிக்கை மூலம் ரூ. 1,32, 01,424 ரொக்கம், 1 கிலோ 609 கிராம் தங்கம், 4 கிலோ 126 கிராம் வெள்ளி கிடைக்கப் பெற்றது. மேலும் மாரியம்மன் கோயிலின் உபகோயில்களான ஆதிமாரியம்மன் திருக்கோயிலில் ரூ. 22, 55,466-ம், உஜ்ஜயினி ஓம் காளியம்மன் திருக்கோயிலில் ரூ. 12,145-ம், போஜீஸ்வரா் திருக்கோயிலில் ரூ. 10, 254-ம் கிடைக்கப் பெற்றது. இதற்கு முன்பு கடந்த 12-ஆம் தேதி உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. 

Advertisement