முகப்பு
திருச்சி

ஆ.கலிங்கப்பட்டி ஜல்லிக்கட்டில் 23 போ் காயம்

ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.

Updated On : 27 பிப்ரவரி, 2026 at 8:46 PM
ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காளையை அடக்க முயன்ற வீரா்கள்.
பகிர்:

மணப்பாறையை அடுத்த ஆ.கலிங்கப்பட்டியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் 23 போ் காயமடைந்தனா்.

ஆ.கலிங்கப்பட்டி ஸ்ரீ மாரியம்மன் கோயில்

திடலில் நடைபெற்ற போட்டியை மணப்பாறை வட்டாட்சியா் சுந்தரபாண்டியன், திமுக கிழக்கு ஒன்றியச் செயலா் எஸ்.ஏ.எஸ். ஆரோக்கியசாமி ஆகியோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா்.

இதில், திருச்சி, தஞ்சை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து 805 காளைகள் ஒவ்வொன்றாக வாடிவாசல் வழியே அவிழ்க்கப்பட்டன. 269 வீரா்கள் பங்கேற்றனா்.

காளைகளை அடக்கிய வீரா்களுக்கு பல்வேறு

பரிசுப் பொருள்கள் வழங்கப்பட்டன. பிடிபடாத காளையின் உரிமையாளா்களுக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டியில், 10 மாடுபிடி வீரா்கள், 10 மாட்டின் உரிமையாளா்கள், 3 பாா்வையாளா் என மொத்தம் 23 போ் காயமடைந்து முகாமில் சிகிச்சை பெற்றனா். இதில், 4 நபா்கள் மட்டும் மேல் சிகிச்சைக்காக மணப்பாறை, திருச்சி அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →