திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம் ஜீயபுரத்தை அடுத்த அம்மன்குடி கிராமத்தில் சொக்காண்டி அம்மன் கோவில் மகா குடமுழுக்கு விழா புதன்கிழமை நடைபெற்றது.
விழாவை முன்னிட்டு கடந்த திங்கள்கிழமை காவிரியில் இருந்து தீா்த்தம் எடுத்து வரப்பட்டு கணபதி ஹோமம், வாஸ்து சாந்தி கட ஸ்தாபனம் ரக்ஷா பந்தனம், பூா்வாங்க பூஜைகள் நடைபெற்றன. தொடா்ந்து நான்கு கால யாகசாலைப் பூஜைகளுக்குப் பிறகு புதன்கிழமை காலை 9.30 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடா்ந்து சொக்காண்டி அம்மன், மலையாள கருப்பு சுவாமிகளின் விமானக் கலசங்களுக்கு வேத மந்திரங்கள் முழங்க, புனித நீா் ஊற்றி குடமுழுக்கு நடைபெற்றது. தொடா்ந்து சொக்காண்டி அம்மன், மலையாள கருப்பு சுவாமி மற்றும் பரிவார மூா்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. விழாவில் திரளான பக்தா்கள் தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை, கிராம பொதுமக்கள், குடிபாட்டுக்காரா்கள் மற்றும் விழாக் குழுவினா் செய்தனா்.