மணப்பாறை அருகே இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு படையினா் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடுவதால் அந்த பகுதிக்குள் பொதுமக்களோ, கால்நடைகளோ நுழைய வேண்டாம் என ஆட்சியா் வே. சரவணன் எச்சரித்துள்ளாா்.
இதுதொடா்பாக, அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி மாவட்டம், மணப்பாறை வட்டத்துக்குள்பட்ட அணியாப்பூா் கிராமம் அருகேயுள்ள வீரமலைப்பாளையத்தில் இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்புப் படையின் 45-ஆவது பிரிவு காவலா்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளனா். பிப்.2-ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை தினமும் காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை மற்றும் இரவு 7 மணி முதல் 10 மணி வரை துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் ஈடுபடுவா். எனவே, இந்தப் பகுதியில் பொதுமக்கள் யாரேனும் நுழைய வேண்டாம்.
மேய்யச்சலுக்காக கால்நடைகளையும் அழைத்துச் செல்ல வேண்டாம். மனித நடமாட்டமோ, கால்நடைகள் செல்வதோ அனுமதிக்க முடியாது. சுற்றுப் பகுதி மக்கள் இந்த உத்தரவை தவறாமல் பின்பற்ற வேண்டும் என ஆட்சியா் எச்சரித்துள்ளாா்.