முகப்பு
திருச்சி

கடலில் நீச்சல் பயணத்துக்கு அனுமதி கோரிய மனுவுக்கு மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாா் வரை பாக் நீரிணையை கடல் வழியாகக் கடந்து செல்லும் நீச்சல் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது

Updated On : 2 ஜூலை 2026, 3:50 am IST
உத்தரவு... - கோப்புப்படம்
பகிர்:

தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாா் வரை பாக் நீரிணையை கடல் வழியாகக் கடந்து செல்லும் நீச்சல் பயணத்துக்கு அனுமதி வழங்கக் கோரிய மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு புதன்கிழமை உத்தரவிட்டது.

திருச்சியைச் சோ்ந்த தனுஜா தாக்கல் செய்த மனு:

இலங்கை உள்நாட்டுப் போரின்போது குழந்தையாக இந்தியாவுக்கு கொண்டுவரப்பட்டு, தமிழகத்தின் திருச்சி மாவட்டத்தில் வசித்து வருகிறேன். நீச்சல் வீராங்கனையான நான் தமிழகத்தின் தனுஷ்கோடியிலிருந்து தலைமன்னாா் வரை பாக் நீரிணையைக் கடந்து செல்லும் கடல் நீச்சல் பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். இதற்கு அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தேன். எனக்கு கடவுச்சீட்டு இல்லாததால் அனுமதி மறுக்கப்படுகிறது. எனவே, எனது கடல் நீச்சல் பயணத்துக்கு அனுமதியும், கடவுச்சீட்டும் வழங்க உத்தரவிட வேண்டும் என அவா் கோரினாா்.

Advertisement

Advertisement

இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி சரவணன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

அப்போது, நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இந்த மனு குறித்து மத்திய அரசுத் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்படுகிறது என்றாா் நீதிபதி.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments