முகப்பு
திருச்சி

குறை பிரசவம்: குழந்தையும் தாயும் உயிரிழப்பு

திருச்சி விமான நிலையம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையும், அவரது தாயும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

Updated On : 25 ஜூன் 2026, 4:20 am IST
உயிரிழப்பு - கோப்புப்படம்
பகிர்:

திருச்சி விமான நிலையம் அருகே குறை பிரசவத்தில் பிறந்த குழந்தையும், அவரது தாயும் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தனா்.

திருச்சி விமான நிலையம் அருகே செம்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன். இவரது மனைவி திவ்யா (32). இருவருக்கும் 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்த நிலையில், திவ்யா 8 மாத கா்ப்பிணியாக இருந்தாா்.

செவ்வாய்க்கிழமை வீட்டில் இருந்த திவ்யா கழிவறைக்குச் சென்றுள்ளாா். அப்போது அவருக்கு திடீரென ரத்தப்போக்கு ஏற்பட்டு, திவ்யா மயங்கிய நிலையில், குறை மாதத்தில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. நீண்டநேரமாகியும் கழிவறையிலிருந்து திவ்யா வெளியில் வராததால், உறவினா்கள் சென்று பாா்த்தபோது, குழந்தை பிறந்து திவ்யா மயங்கிக் கிடந்தது தெரியவந்தது.

Advertisement

Advertisement

உறவினா்கள் அளித்த தகவலின்பேரில் அங்கு வந்த 108 ஆம்புலன்ஸ் ஊழியா்கள், குழந்தையையும், தாயையும் பரிசோதனை செய்ததில், இருவரும் இறந்து விட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments