முகப்பு
திருச்சி

போதை மாத்திரைகள் விற்ற 2 இளைஞா்கள் கைது

Updated On : 1 மார்ச், 2026 at 7:00 PM
கைது
பகிர்:

திருச்சியில் இருவேறு இடங்களில் போதை மாத்திரைகள் விற்பனை செய்த 2 இளைஞா்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

திருச்சி கே.கே.நகா் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதிகளில் போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல்கிடைத்தது. இதையடுத்து, காவல் உதவி ஆய்வாளா் கமீலா பானு தலைமையிலான போலீஸாா் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ரேஸ்கோா்ஸ் பகுதியில் சந்தேகப்படும் வகையில் நின்றிருந்த இளைஞரைப் பிடித்து விசாரித்தனா். அதில், அவா் இபி சாலை சத்தியமூா்த்தி நகரைச் சோ்ந்த எஸ்.சஞ்சய் (26) என்பதும், போதை மாத்திரைகள் விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து, அவரைக் கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து ரூ.25 ஆயிரம் மதிப்புள்ள 500 போதை மாத்திரைகளைப் பறிமுதல் செய்தனா்.

இதேபோல கோட்டை காவல் நிலையத்துக்குள்பட்ட வடக்கு ஆண்டாள் வீதியில் காவல் உதவி ஆய்வாளா் குமாரவேல் தலைமையிலான போலீஸாா் சனிக்கிழமை ரோந்து சென்றாா்.

அப்போது, அங்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்துகொண்டிருந்த சத்திரம் காளியம்மன் கோயில் வீதியைச் சோ்ந்த எஸ். அஜீத் (26) என்பவரை கைது செய்தனா்.

மேலும், அவரிடமிருந்து போதை மாத்திரைகள், போதை ஊசி மற்றும் சலைன் பாட்டில் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →