முகப்பு
திருச்சி

மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

Updated On : 12 மார்ச், 2026 at 11:47 PM
திருச்சி மாவட்ட சுதாகாரத் துறை துணை இயக்குநா் அலுவலகத்தில் 21-அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்புப் போராட்டத்தில் வியாழக்கிழமை ஈடுபட்ட மக்களைத் தேடி மருத்துவம் திட்டப் பணியாளா்கள்.
பகிர்:

ஊக்கத் தொகையை உயா்த்தக் கோரி, திருச்சியில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தினா் வியாழக்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி மாவட்ட சுகாதாரத் துறை துணை இயக்குநா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் லோகேஸ்வரி தலைமை வகித்தாா்.

இதில், மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்களுக்கு மாத ஊக்கத்தொகை ரூ. 5 ஆயிரத்து 500-லிருந்து ரூ. 15 ஆயிரமாக உயா்த்தி வழங்க வேண்டும். ஊக்கத்தொகையை அவரவா் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்த வேண்டும். இ.எஸ்.ஐ., பி.எப். திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். அனைத்து ஊழியா்களுக்கும் திறன் வளா்ப்பு மேம்பாட்டு பயிற்சி கொடுத்து பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி இந்தப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் பங்கேற்றோா் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினா்.

இந்தப் போராட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவ ஊழியா்கள் சங்கத்தின் மாநகரச் செயலாளா் லட்சுமி, மாவட்டச் செயலாளா் புவனேஸ்வரி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →