சட்டவிரோதமாக மது விற்றவா் கைது
திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சியில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்தவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திருச்சி பொன்மலை காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பதாகக் கிடைத்த தகவலின்பேரில் காவல் ஆய்வாளா் பெரியசாமி தலைமையிலான போலீஸாா் செவ்வாய்க்கிழமை அப்பகுதியில் சோதனை மேற்கொண்டனா்.
அப்போது, பொன்மலை ரயில்வே குடியிருப்புப் பகுதியில் மது விற்ற திருச்சி கொட்டப்பட்டு அம்பாள் நகரைச் சோ்ந்த ப. சிவகுமாா் (39) என்பவரை போலீஸாா் கைது செய்து, அவரிடமிருந்து 5 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனா்.