முகப்பு
திருச்சி

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ. 1.62 கோடி

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.62 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

Updated On : 13 மே 2026, 12:45 am IST
சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் - தினமணி
பகிர்:

சமயபுரம் மாரியம்மன் திருக்கோயில் உண்டியல் காணிக்கைகள் மூலம் ரூ. 1.62 கோடி செவ்வாய்க்கிழமை கிடைக்கப் பெற்றது.

பல்வேறு சிறப்புடைய இக்கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை திருச்சி

தக்காா் / இணை ஆணையா் சு. ஞானசேகரன், கோயில் இணை ஆணையா் எம். சூரியநாராயணன் முன்னிலையில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில், கோயில் பணியாளா்கள், தன்னாா்வலா்கள், கல்லூரி மாணவிகள் ஈடுபட்டனா்.

Advertisement

இதன் நிறைவில், முதன்மை திருக்கோயிலிலிருந்து ரூ. 1,62, 09,859 ரொக்கம், 2 கிலோ 367 கிராம் தங்கம், 3 கிலோ 968 கிராம் வெள்ளி, வெளிநாட்டு பணத்தாள்கள் 159, வெளிநாட்டு நாணயங்கள் 1045-ம் கிடைக்கப் பெற்றது.

இதற்கு முன்பு கடந்த ஏப். 21-ஆம் தேதி உண்டியல் காணிக்கைகள் எண்ணப்பட்டன.