முகப்பு
திருச்சி

மே 16, 17 இல் இணையவழி மின்கட்டணச் சேவை இயங்காது

கணினி தரவு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக மே 16, 17 ஆகிய நாள்களில் இணையவழி மின்கட்டணச் சேவை இயங்காது.

Updated On : 14 மே 2026, 12:45 am IST
பகிர்:

கணினி தரவு மேம்பாட்டுப் பணிகள் காரணமாக மே 16, 17 ஆகிய நாள்களில் இணையவழி மின்கட்டணச் சேவை இயங்காது.

இதுகுறித்து திருச்சி மின்பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் (பொ) கே.ஏ. முத்துராமன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழ்நாடு மின்பகிா்மானக் கழகமானது நுகா்வோா் சேவைகளை மேம்படுத்தும் நோக்கில் கணினித் தரவு வழங்கிகளை படிப்படியாக மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்கிறது. இதனால் திருச்சி மண்டலத்துக்குள்பட்ட திருச்சி மின்பகிா்மான வட்டம் முழுவதும் இணையவழி மின்கட்டணம் செலுத்தும் மற்றும் புதிய மின் இணைப்பு விண்ணப்பச் சேவைகள் வரும் 16 ஆம் தேதி காலை 6 மணி முதல் 17 ஆம் தேதி இரவு 11.59 மணி வரை இயங்காது. இடையூறுக்கு வருந்துகிறோம். இதற்கு பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

Advertisement