முகப்பு
வேலூர்

இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்பு பயிற்சி முகாம் தொடக்கம்

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் சார்பில், மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 நாள்கள் நடைபெறவுள்ள இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்பு இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

Updated On : 12 மே 2013, 5:45 am IST
பகிர்:

தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்பக் கல்வி மன்றத்தின் சார்பில், மேல்விஷாரம் சி.அப்துல் ஹக்கீம் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 20 நாள்கள் நடைபெறவுள்ள இளம் விஞ்ஞானிகள் ஊக்குவிப்பு இலவச பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை தொடங்கியது.

இம்முகாமில் வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் 2012-13ஆம் கல்வியாண்டில் 9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய 80 மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.

கல்லூரித் தாளாளர் அப்ரார் அஹமத் தலைமையில், முகாமை மாவட்ட அறிவியல் அலுவலர் லெனின் தமிழ்கோவன், அப்துல் ஹக்கீம் பொறியியல் கல்லூரியின் டீன் பீர் தொடங்கிவைத்தனர்.

Advertisement

Advertisement

மேல்விஷாரம் முஸ்லிம் கல்விச் சங்கத் தலைவர் சௌகார் நிஸார் அஹமத், கல்லூரி முதல்வர் அப்துல் ஹமீது, திருவள்ளுவர் பல்கலைக்கழக முன்னாள் ஆட்சி மன்றக் குழு உறுப்பினர் எச். முனவர்ஜான், வேதியியல் துறை பேராசிரியர் கே. அன்வர் பாஷா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.