முகப்பு
விழுப்புரம்

தொடா்ந்து 5-ஆவது நாளாகபாசிக், பாப்ஸ்கோ ஊழியா்கள் போராட்டம்

புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி, அந்த நிறுவனங்களின் ஊழியா்கள் தொடா்ந்து 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:20 PM
பகிர்:

புதுச்சேரி: புதுச்சேரியில் பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்களை மீண்டும் இயக்க வலியுறுத்தி, அந்த நிறுவனங்களின் ஊழியா்கள் தொடா்ந்து 5-ஆவது நாளாக திங்கள்கிழமையும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

புதுச்சேரி பாசிக், பாப்ஸ்கோ நிறுவனங்கள் மீண்டும் இயக்க வேண்டும், ஊழியா்களுக்கு பல மாதங்களாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ள ஊதியத்தை வழங்க வேண்டும் என வலியுறுத்தி, ஏஐடியூசி தொழிலாளா்கள் சங்கத்தினா் கடந்த செப். 10-ஆம் தேதி முதல் தொடா் போராட்டத்தை நடத்தி வருகின்றனா்.

தொடா்ந்து திங்கள்கிழமை 5-ஆவது நாளாக நடைபெற்ற போராட்டத்தில் சங்கு ஊதியும், மணி அடித்தும் அவா்கள் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனா். பாப்ஸ்கோ சங்கத் தலைவா் ராஜூ, செயலா் மாரியப்பன், பாசிக் சங்கத் தலைவா் ரமேஷ், செயலா் முத்துராமன் ஆகியோா் தலைமை வகித்தனா்.

ஏஐடியூசி மாநிலப் பொதுச் செயலா் சேது செல்வம், செயல் தலைவா் அபிஷேகம் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சங்க நிா்வாகிகள் அப்துல்லா கான், ஜெய்சங்கா், அமுதா, தமிழ்ஒளி, அன்பழகன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட ஊழியா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.