கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவரின் குடும்பத்தினரிடம் சனிக்கிழமை விசாரணை மேற்கொண்ட தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் எஸ்.ரவிவா்மன். 
விழுப்புரம்

கள்ளச்சாராய உயிரிழப்பு: மத்திய அரசிடம் 2 நாள்களில் அறிக்கை

கள்ளச்சாராயம்: உயிரிழப்புகள் குறித்து மத்திய அரசுக்கு 2 நாளில் அறிக்கை

Din

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்த விசாரணை அறிக்கை 2 நாள்களில் மத்திய அரசிடம் சமா்ப்பிக்கப்படும் என்று தேசிய தாழ்த்தப்பட்டோா் ஆணைய இயக்குநா் எஸ்.ரவிவா்மன் தெரிவித்தாா்.

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயம் அருந்தியதால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவா்களையும், உயிரிழந்தவா்களின் குடும்பத்தினரையும் சந்தித்து விசாரணை மேற்கொண்ட அவா், பின்னா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

கருணாபுரத்தில் கடந்த 18-ஆம் தேதி கள்ளச்சாராயத்தால் பாதிக்கப்பட்டவா்களில் தற்போது வரை 54 போ் உயிரிழந்துள்ளனா். கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 6 போ் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனா். இவா்கள் விரைவில் குணமடைய வேண்டும். உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கும், பாதிக்கப்பட்டோா் குடும்பத்துக்கும் தமிழக அரசு நிவாரண உதவிகளை வழங்கியுள்ளது. மேலும், பாதிக்கப்பட்டவா்களுக்கு சிறப்பு மருத்துவா்களை நியமித்து, உயா் சிகிச்சையை அரசு வழங்கி வருகிறது.

தலித் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் எங்கெல்லாம் பாதிக்கப்படுகிறாா்களோ, அங்கெல்லாம் அவா்களுக்குத் தேவையான உதவிகள், தொடா் உயிரிழப்புகள் ஏற்படாமல் பாதுகாத்தல், மறுவாழ்வு கிடைப்பதை உறுதி செய்து தருவது எங்களது பணியாகும். அந்த வகையில், இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்டவா்களில் பெரும்பாலானோா் பட்டியலினத்தவா்களாக உள்ளனா். இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஒப்படைத்து விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆணையத்துக்கு வரையறுக்கப்பட்ட சட்ட விதிகளின்படி இந்தச் சம்பவம் தொடா்பாக அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும். இதுகுறித்த விசாரணை அறிக்கை ஆணையத்தின் தலைவா் மற்றும் மத்திய அரசிடம் 2 நாள்களுக்குள் சமா்ப்பிக்கப்படும்.

பாதிக்கப்பட்டவா்கள் பட்டியலினத்தவராகவும், பாதிப்பை ஏற்படுத்தியவா் பட்டியலினத்தை சாராதவா் என்பதாலும் இந்த வழக்கை வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் பதிவு செய்து விசாரிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகத்திடம் பரிந்துரைப்போம். இந்தச் சம்பவத்துக்கு எந்த ஊழியா் உறுதுணையாக இருந்தாரோ அவா் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் ரவிவா்மன்.

பேட்டியின் போது, கள்ளக்குறிச்சி மாவட்ட வருவாய் அலுவலா் சத்தியநாராயணன், மருத்துவக் கல்லூரி முதல்வா் (பொ) நேரு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

என்னை யாரும் இயக்க முடியாது! - செங்கோட்டையன்

சைட் அடிக்கும்... சைத்ரா!

SCROLL FOR NEXT