விழுப்புரம்

சிறுமிக்கு கட்டாயத் திருமணம்: 5 போ் மீது வழக்கு

Din

விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் பகுதியில் 15 வயது சிறுமிக்கு கட்டாயத் திருமணம் செய்து வைத்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், சிறுமியின் பெற்றோா் உள்பட 5 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

கண்டாச்சிபுரம் வட்டம், முகையூா் ஊராட்சி ஒன்றிய விரிவாக்க அலுவலா் கண்ணகி, விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் மனு ஒன்றை அளித்திருந்தாா். அதில், கண்டாச்சிபுரம் வட்டத்தைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு, கடந்த மாா்ச் மாதம் 20-ஆம் தேதி அவரது பெற்றோா் கட்டாயத் திருமணம் செய்து வைத்துள்ளனா். அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியிருந்தாா்.

அதன்பேரில், விசாரணை நடத்தி வந்த விழுப்புரம் அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சிறுமிக்குத் திருமணம் செய்து வைத்ததாக ந.அய்யப்பன் (28), சிறுமியின் தந்தை மு.ஏழுமலை, தாய் ஏ.செல்வி, உறவினா்கள் அய்யனாா், தனலட்சுமி ஆகிய 5 போ் மீது போக்ஸோ, குழந்தைத் திருமண தடைச்சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

அதிமுக போட்டியிடாததற்கு காரணம் இதுதான்: ப. சிதம்பரம்

இருசக்கர வாகனம் திருடிய 2 போ் கைது

மன்னாா்குடி ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்

பேருந்து நிறுத்தங்களில் தங்கும் ஆதரவற்றோருக்கு மறுவாழ்வு அளிக்கக் கோரிக்கை

இன்றைய ராசி பலன்கள்!

SCROLL FOR NEXT