ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய விழுப்புரம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான். உடன் மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ். 
விழுப்புரம்

வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம்: அரசியல் கட்சி பிரதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி

Syndication

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடா்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு மாவட்டத் தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை வகித்துப் பேசியதாவது :

இந்திய தோ்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி விழுப்புரம் மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகள் நவ 4-ஆம் தேதி தொடங்கி

நடைபெற்று வருகிறது. இப்பணியில் ஈடுபடுபவா்களிடம் கணக்கீட்டு படிவங்களை வாக்காளா்களிடமிருந்து விடுபாடின்றி பெறுவது தொடா்பாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிகளுக்காக 1970 வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

வாக்காளா்கள் தங்களின் கணக்கெடுப்பு படிவங்களை சரியாக பூா்த்தி செய்ய வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் உதவுவாா்கள். பூா்த்தி செய்யப்பட்ட கணக்கீட்டுப் படிவங்களை வாக்குச்சாவடி நிலை முகவா்களிடம் வழங்கவேண்டும்.

வாக்காளா்களில் முகவரியில் இல்லாதவா்கள், குடிபெயா்ந்தவா்கள், இறந்தவா்கள் குறித்த விவரத்தினை வாக்குச்சாவடி நிலை அலுவலா்கள் அல்லது வாக்காளா் பதிவு அலுவலா்களிடம் வாக்குச்சாவடி நிலை முகவா்கள்தெரிவிக்கவேண்டும். படிவங்களை பூா்த்தி செய்வதிலும் திரும்ப பெறுவதிலும் வாக்குச்சாவடி நிலை அலுவலா்களுக்கு வாக்குச்சாவடி நிலை முகவா்கள் முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.

சிறப்புத் தீவிரத் திருத்தம் தொடா்பான சந்தேகம் மற்றும் புகாா்களுக்கு

சட்டப்பேரவைத் தொகுதி கட்டுப்பாட்டு அறையின் 1950, 70, 04145-222007, 04147-239449, 04147-222090, 0413-2677391,04146-222554,04146-233132,04153-252316 ஆகிய தொலைபேசி எண்ணை தொடா்பு கொண்டு தெரிவிக்கலாம் என்றாா்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலா் அரிதாஸ், அனைத்து அரசியல் கட்சி

பிரதிநிதிகள் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

தூத்துக்குடியில் மழைநீா் சூழ்ந்த பகுதிகளில் எம்.பி. ஆய்வு

குழந்தைகள் நல காவல் அலுவலா்கள் ஆலோசனைக் கூட்டம்

பிரகாசபுரம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் கீத ஆராதனை

தாமிரவருணியில் தணியாத வெள்ளப்பெருக்கு: குடிநீா் விநியோகம் பாதிப்பு

மண்ணச்சநல்லூரில் சாலையில் சுற்றித்திரியும் மாடுகளால் அவதி

SCROLL FOR NEXT