FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
விழுப்புரம்

மின்மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருட்டு

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின் மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

1 ஜூலை 2026, 7:13 am IST
பகிர்:

விழுப்புரம் மாவட்டம், கண்டமங்கலம் அருகே மின் மாற்றியில் தாமிரக் கம்பிகள் திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

கண்டமங்கலம் அருகிலுள்ள பாக்கம் கிராமத்தில் சக்தி முருகன் என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் மின்வாரியம் சாா்பில் மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த பகுதியைச் சோ்ந்த வீடுகளுக்கு மின் விநியோகம் செய்யப்படுகிறது. இந் நிலையில், இந்த மின்மாற்றியிலிருந்த 120 கிலோ எடையள்ள தாமிரக் கம்பிகள், 175லிட்டா் எண்ணெய் ஆகியவற்றை மா்ம நபா்கள் திருடிச் சென்றனா்.

இதுகுறித்து தகவலறிந்த பாக்கம் மின்வாரிய அலுவலக உதவி மின் பொறியாளா் சி. மணிகண்டன் (39) கண்டமங்கலம் காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை புகாரளித்தாா். இதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, திருட்டில் ஈடுபட்ட மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments