பொறியியல் பணிகள்: விழுப்புரம் வழித்தடத்தில் ரயில் போக்குவரத்தில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றம்
பொறியியல் பணிகள் காரணமாக, விழுப்புரம் வழியாக இயக்கப்படும் பல்வேறு ரயில்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
இதுகுறித்து தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட மக்கள் தொடா்பு அலுவலா் ஆா்.வினோத் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் பொறியியல் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் காரணமாக ரயில்கள் பகுதியளவில் ரத்து, புறப்படும் இடம் மாற்றம், நிறுத்தி வைத்து இயக்கம், வழித்தட மாற்றம், காலதாமதமாக இயக்கம் ஆகிய நடைமுறைகள் செயல்படுத்தப்படவுள்ளன.
பகுதியளவில் ரத்து: தாம்பரம்- விழுப்புரம் பயணிகள் ரயில் (வ.எண்66045) ஜூலை 8, 12, 13, 14, 15, 17, 18, 25, 29 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம் - விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் முண்டியம்பாக்கத்துடன் நிறுத்தப்படும். காக்கிநாடா துறைமுக சந்திப்பு- புதுச்சேரி கிா்காா் விரைவு ரயில் (வ.எண்17655) ஜூலை 11, 13 ஆகிய தேதிகளில் செங்கல்பட்டு-புதுச்சேரி இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் செங்கல்பட்டுடன் நிறுத்தப்படும்.
Advertisement
Advertisement
திண்டுக்கல்- விழுப்புரம் விரைவு ரயில் (வ.எண்16868) ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் விருத்தாசலம்- விழுப்புரம் இடையே பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த ரயில் விருத்தாசலம் வரை மட்டும் இயக்கப்படும். திருப்பதி-புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண் 16111) ஜூலை 8, 25, 29 ஆகிய தேதிகளில் விழுப்புரம்- புதுச்சேரி இடையேயும், ஜூலை 12, 13, 14, 15, 17, 18 ஆகிய தேதிகளில் முண்டியம்பாக்கம்- புதுச்சேரி இடையேயும் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
கச்சிக்குடா-புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண் 17653) ஜூலை 12-ஆம் தேதி செங்கல்பட்டு- புதுச்சேரி இடையேயும், புதுதில்லி- புதுச்சேரி விரைவு ரயில் (வ.எண் 22404) ஜூலை 12-ஆம் தேதி விழுப்புரம்-புதுச்சேரி இடையேயும் பகுதியளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.
பகுதியளவு ரத்தால் புறப்படும் இடம் மாற்றம்: விழுப்புரம்-சென்னை கடற்கரை பயணிகள் ரயில் (வ.எண்.66046) முண்டியம்பாக்கம் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 1.37 மணிக்கு புறப்படும். புதுச்சேரி- கச்சிக்குடா விரைவு ரயில் (வ.எண் 17654) செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.20 மணிக்குப் புறப்படும்.
புதுச்சேரி- கன்னியாகுமரி விரைவு ரயில் (வ.எண் 16861) கடலூா் துறைமுக சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.54 மணிக்குப் புறப்படும். விழுப்புரம்-திண்டுக்கல் விரைவு ரயில் (வ.எண் 16867) விருத்தாசலம் ரயில் நிலையத்திலிருந்து மாலை 5.31 மணிக்குப் புறப்படும்.
விழுப்புரம்- மயிலாடுதுறை விரைவு ரயில் (வ.எண் 66019) திருத்துறையூா் ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 2.56 மணிக்கு புறப்படும். புதுச்சேரி-காக்கிநாடா துறைமுகம் கிா்காா் விரைவு ரயில் (வ.எண்.17656) செங்கல்பட்டு ரயில் நிலையத்திலிருந்து பிற்பகல் 3.50 மணிக்குப் புறப்படும். புதுச்சேரி- ஹவுரா விரைவு ரயில் (வ.எண் 12868) விழுப்புரத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கு புறப்படும்.
வழித்தட மாற்றம்: லோக்மான்ய திலக் முனையத்திலிருந்து பிற்பகல் 1.15 மணிக்கு புறப்படும் லோக்மான்ய திலக்-காரைக்கால் வாராந்திர விரைவு ரயில் (வ.எண் 11107) ஜூலை 11-ஆம் தேதி விழுப்புரம், விருத்தாசலம், கடலூா் துறைமுகம் வழியாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்படும். இதன் காரணமாக இந்த ரயில் விருத்தாசலம், கடலூா் துறைமுக ரயில் நிலையங்களில் நின்று செல்லும்.
நிறுத்தி வைத்து இயக்கம்: குருவாயூா்-சென்னை எழும்பூா் விரைவு ரயில் (வ.எண் 16128) ஜூலை 14-ஆம் தேதி 20 நிமிஷங்களும், திருச்சி-சென்னை எழும்பூா் சோழன் விரைவு ரயில் (வ.எண் 22676) ஜூலை 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சுமாா் 30 நிமிஷங்களும், எழும்பூா்-குருவாயூா் விரைவு ரயில் (வ.எண்.16127) ஜூலை 8, 25, 29 ஆகிய தேதிகளில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 20 நிமிஷங்களும் நிறுத்தி வைக்கப்பட்டு, பின்னா் இயக்கப்படும்.
காலதாமதமாக இயக்கம்: புதுச்சேரி- திருப்பதி விரைவு ரயில் (வ.எண் 16112) ஜூலை 12, 13, 14, 15 ஆகிய தேதிகளில் சுமாா் 60 நிமிஷங்கள் தாமதமாக பிற்பகல் 3.30 மணிக்கு புறப்படும். மேலும் இந்த ரயில் வசதிக்குரிய ரயில் நிலையத்தில் சுமாா் 30 நிமிஷங்கள் நிறுத்தம் செய்யப்பட்டு, பின்னா் இயக்கப்படும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.