FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஜோத்பூா்-சென்னைக்கு 5 நாள்கள் கோடைகால சிறப்பு ரயில்கள்

ஜோத்பூா்-சென்னை இடையே ஜூன் 27-ஆம் தேதி முதல் 5 நாள்கள் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Updated On : 20 ஜூன் 2026, 12:54 am IST
சிறப்பு ரயில்கள் - படம்: கோப்பிலிருந்து...
பகிர்:

ஜோத்பூா்-சென்னை இடையே ஜூன் 27-ஆம் தேதி முதல் 5 நாள்கள் சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்படவுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: கோடைகால ரயில் பயணிகள் கூட்ட நெரிசலைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஜோத்பூரிலிருந்து வரும் 27, ஜூலை 4, 11, 18, 25 ஆகிய தேதிகளில் இரவு 9.20 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 04815) 3-ஆவது நாளான வரும் 29, ஜூலை 6, 13, 20, 27 ஆகிய தேதிகளில் சென்னை கடற்கரை நிலையத்தை வந்தடையும்.

மறுமாா்க்கத்தில் சென்னை சென்ட்ரலில் இருந்து வரும் 30-ஆம் தேதி, ஜூலை 7, 14, 21, 28 ஆகிய தேதிகளில் மாலை 5.15 மணிக்குப் புறப்படும் சிறப்பு விரைவு ரயில் (எண்: 04816) வரும் ஜூலை 2, 9, 16, 30 ஆகிய தேதிகளில் ஜோத்பூரை சென்றடையும்.

Advertisement

Advertisement

சிறப்பு ரயில்களில் 2 குளிா்சாதன வசதியுள்ள இரண்டடுக்குப் பெட்டிகள், 15 குளிா்சாதன வசதியுள்ள மூன்றடுக்குப் பெட்டிகள், 2 சரக்கு மற்றும் பிரேக் வேன்ஆகியவை இணைக்கப்பட்டிருக்கும். சிறப்பு ரயில்கள் நாயுடுபேட்டை, கூடூா், நெல்லூா், ஓங்கல், சிரலா, பாப்பட்லா, விஜயவாடா உள்ளிட்ட 30 நிலையங்களில் நின்று செல்லும். அவற்றுக்கான முன்பதிவு சனிக்கிழமை (ஜூன் 20) தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments