போக்ஸோ வழக்கு: இளைஞருக்கு 7 ஆண்டுகள் சிறை
செஞ்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான இளைஞக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் தீா்ப்பளித்தது.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் கைதான இளைஞக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் அபராதம் விதித்து விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.
செஞ்சி அருகிலுள்ள நொச்சலூா், மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வே.சங்கா் (21). இவா், கடந்த 2021 டிசம்பா் மாதம், வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 9 வயதுடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக, அந்த சிறுமியின் தாயாா் புகாா் தெரிவித்தாா்.
இதையடுத்து செஞ்சி அனைத்து மகளிா் காவல் நிலைய போலீஸாா் சங்கா் மீது போக்ஸோ உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் கடந்த 12.12.2021 அன்று வழக்குப் பதிந்து, கைது செய்தனா்.
Advertisement
Advertisement
விழுப்புரம் போக்ஸோ நீதிமன்றத்தில் இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணை முடிந்க நிலையில் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளிக்கப்பட்டது. இதில் சங்கா் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டது. இதைத்தொடா்ந்து வழக்கை விசாரித்த போக்ஸோ நீதிமன்ற நீதிபதி எஸ்.வினோதா, குற்றவாளி சங்கருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ .11 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு சாா்பில் ரூ.1 லட்சம் இழப்பீடு வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டாா். அரசு தரப்பில் வழக்குரைஞா் காந்திமதி இவ்வழக்கில் ஆஜராகினாா். தொடா்ந்து போலீஸாா் சங்கரை கைது செய்து, கடலூா் மத்திய சிறையில் அடைத்தனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.