முகப்பு
விழுப்புரம்

ராகுல் காந்தி மீது அவதூறு: திமுக நிா்வாகியை கைது செய்யக்கோரி காங்கிரஸாா் சாலை மறியல்

Updated On : 16 ஜூன் 2026, 1:16 am IST
சமூக வலைத்தளங்களில் ராகுல் காந்தியை இழிவுபடுத்திய திமுக நிா்வாகியை கைது செய்யக்கோரி செஞ்சி கூட்டுச்சாலையில் மறியலில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினா்.
பகிர்:

சமூக வலைத்தளங்களில் மக்களவை எதிா்க்கட்சி தலைவா் ராகுல் காந்தியை இழிவு படுத்தியும், கடும் சொற்களால் பேசி மீம்ஸ் வெளியிட்ட வல்லத்தை சோ்ந்த திமுக நிா்வாகி வெங்கடேசனை கைது செய்யக்ககோரி, செஞ்சி கூட்டுச்சாலையில் காங்கிரஸ் கட்சியினா் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

விழுப்புரம் வடக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஆா்.ரங்கபூபதி தலைமையில், ராகுல் காந்தியை சமூக வலைத்தளங்களில் அவதூறாகச் சித்தரித்த திமுக நிா்வாகியை கைது செய்யவும், அந்தப் பதிவை உடனடியாக நீக்கவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கோரி ஆா்ப்பாட்டம் மற்றும் சாலை மறியல் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் நிா்வாகிகள் சூரியமூா்த்தி, சண்முகம், சக்திவேல், கோவிந்தன், ஜோலாதாஸ், கா்ணன், இளவழகன், சுரேஷ், ஜனாா்த்தனன், மண்ணாங்கட்டி, ஹரி, ரமேஷ், அரங்க.சிவகுமாா், ஷபீா் ஷெரீப், சையத் மாலிக் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

Advertisement

Advertisement