முகப்பு
தமிழ்நாடு

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்கள் வைத்தது திமுக! முரசொலி செய்தி

தில்லியில் ராகுல், காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்கள் வைத்தது திமுக என முரசொலி செய்தி வெளியீடு பற்றி..

Updated On : 9 ஜூன் 2026, 12:15 pm IST
தில்லி பேனர் - பிடிஐ
பகிர்:

புது தில்லியில் நேற்று ஒருபக்கம் இந்தியா கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டமும், மறுபக்கம், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிரான ஹிந்தி பேனர்களும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், அந்த பேனர்களை திமுக வைத்ததாக முரசொலியில் இன்று செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு கூட்டணியில் இருக்கும் கட்சிகளே இவ்வாறு அடித்துக் கொண்டால் இவர்கள் எவ்வாறு ஒற்றுமையாக மக்களுக்காகப் போராடுவார்கள் என்பது போன்ற வாசகங்கள் இடம்பெற்றிருந்ததால், இந்த பேனர்களை இந்தியா கூட்டணிக்கு எதிரானவர்கள்தான் வைத்திருப்பார்களோ என்ற சந்தேகங்கள் எழுந்தன. ஆனால், இந்தியா கூட்டணியில் இருந்து விலகிய திமுக வைத்திருக்கும் என்பது போன்ற தோற்றம் ஏற்படவில்லை.

இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள், ராகுல் மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகக் கூறிய வாசகங்கள் அடங்கிய பேனர்கள் அதுவும் ஹிந்தியில் புகைப்படங்களுடன் வைக்கப்பட்டிருந்ததால் நிச்சயம் பலருக்கும் அதனை யார் வைத்திருப்பார்கள் என்பதில் சந்தேகம் இருந்தது.

Advertisement

Advertisement

ஆனால், இன்று திமுகவின் நாளிதழான முரசொலியில், இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்தது திமுக என்று ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதில் இந்­தியா கூட்­ட­ணி­யின் ஆலோ­சனை கூட்­டத்தை தி.மு.க. புறக்­கணித்த நிலை­யில், டெல்­லி­யில், ராகுல்­காந்தி, காங்­கி­ரஸ் கட்­சியை விமர்­ச­னம் செய்து, தி.மு.க. சார்­பில், பேனர்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன என்று பதிவிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த செய்தியில், புது­டெல்­லி­யில், இந்­தியா கூட்டணி கட்­சி­க­ளின் ஆலோ­ச­னைக் கூட்­டம் நேற்று நடைபெற்­றது. இந்த கூட்­டத்தை தி.மு.க., ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்­சி­கள் புறக்­க­ணித்­தன.

புது­டெல்­லி­யில் நடை ­பெ­றும் இந்­தியா கூட்­ட­ணிக் கூட்டத்தை தி.மு.க. புறக்­க­ணிக்­கும் என்று ஏற்­க­னவே தலைமை அறி­விப்பு வெளி­யிட்­டி­ருந்­தது.

அந்த அறி­விப்­பில், டெல்லியில்நடை­பெ­றும் “இந்­தியா” கூட்­ட­ணிக் கட்­சி­க­ளின் கூட்­டத்­திற்கு வரு­மாறு திரா­விட முன்­னேற்­றக் கழ­கத்­திற்கு அழைப்பு விடுக்­கப்­பட்­டுள்­ளது.

இந்­தியா கூட்­டணி தொடங்­கி­ய­தி­லி­ருந்து அக்­கூட்­ட­ணி­யின் மையச் சக்­தி­யாக திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் இயங்­கி­யது. திரா­விட முன்­னேற்­றக் கழ­கத் தலை­வர் மு.க.ஸ்டாலின் அவர்­கள்­தான் நாட்டு மக்­க­ளுக்­கான முக்­கி­யப் பிரச்சினைகளில் முதன்­மைக் குரல் எழுப்பி வந்­தார். இது இந்தியா கூட்ட­ணி­யில் இடம் பெற்­றுள்ள கட்­சி­­களும் அக்கட்சித் தலை­வர்­­களும் நன்கு அறி­வார்­கள்.

தமிழ்­நாட்­டில் நடை­பெற்ற சட்­ட­மன்­றப் பொதுத்தேர்தலுக்குப் பின், காங்­கி­ரஸ் கட்சி, திரா­விட முன்னேற்­றக் கழகத்திற்கு இழைத்த துரோ­கத்­தி­னால் மிகுந்த மனக்­ காயமுற்றிருக்­கும் கழ­கத் தோழர்­க­ளின் உணர்­வு­க­ளுக்கு மதிப்­ ­பளிக்­கின்ற வகை­யில், வரு­கின்­ற ­ஜூன் 8-ஆம் தேதி டெல்­லி­யில் நடை­பெ­றும் “இந்­தியா” கூட்­ட­ணிக் கூட்டத்தில், அதா­வது காங்­கி­ரஸ் பங்­கேற்­கும் கூட்­டத்­தில் திரா­விட முன்­னேற்­றக் கழ­கம் பங்­கேற்­காது.

இக்­கூட்­டத்­தில் பங்­கேற்­காத அதே­நே­ரத்­தில் இந்­தக் கூட்டத்தில் இடம்­பெற்­றுள்ள மற்ற கட்­சி­கள் முன்­வைக்­கும் நாட்டு நல­னைப் பாதிக்­கும் பிரச்­சி­னை­க­ளில்,திரா­விட முன்னேற்­றக் கழ­கம்என்­றைக்­கும் குரல் கொடுக்­கும் என்று குறிப்­பிட்­டி­ருந்­தது. இத­னி­டையே, டெல்­லி­யின் பல்­வேறு பகுதிகளில், ராகுல்­காந்­தி­யை­யும், காங்­கி­ரஸ் கட்­சி­யை­யும் விமர்­ச­னம் செய்து, தி.மு.க. சார்­பில், தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்­நாடு எதிர்க்­கட்­சித் தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் படத்­து­டன் பேனர்­கள் வைக்­கப்­பட்­டுள்­ளன. அதில், இரு­பது ஆண்­டு­க­ளுக்­கும் மேலாக, காங்­கி­ரஸ் நம்மைச் சார்ந்து வளர்ந்து வந்­தது என்­றும், இன்று அவர்­கள் நமது முது­கில்

குத்­தி­விட்­டார்­கள் என்­றும் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது. தங்­க­ளுக்குள்­ளேயே சண்­டை­யி­டு­ப­வர்­கள், எப்­படி ஒன்­றி­ணைந்து போரா­டு­வார்­கள்? என்­றும் பேன­ரில் எழு­தப்­பட்­டுள்­ளது.

மேலும், காங்­கி­ரஸ் கட்­சியை விமர்­சித்து தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழ்­நாடு எதிர்க்­கட்சி தலை­வர் உத­ய­நிதி ஸ்டாலின் பேசிய கருத்­துக்­க­ளும், சரத்­ப­வார், மம்தா பானர்ஜி, அர­விந்த் கெஜ்­ரி­வால் ஆகி­யோர் காங்­கி­ரஸ் கட்­சியை விமர்சித்து பேசிய பேச்­சுக்­­களும், புது­டெல்­லி­யில் பல்­வேறு இடங்­க­ளில் வைக்­கப்­பட்ட பேனர்­­களில் இடம்­பெற்றுள்ளன என்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.