முகப்பு
விழுப்புரம்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் 6 கிலோ 900 கிராம் கஞ்சா பறிமுதல்

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ 900 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் பறிமுதல் செய்தனா்.

Updated On : 7 மார்ச், 2026 at 8:36 PM
பகிர்:

விழுப்புரம் ரயில் நிலையத்தில் கேட்பாரற்று கிடந்த 6 கிலோ 900 கிராம் கஞ்சா பொட்டலத்தை ரயில்வே காவல்துறையினரும், ரயில்வே பாதுகாப்புப் படையினரும் சனிக்கிழமை பறிமுதல் செய்தனா்.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படை அலுவலா் எம்.பிலோமின்ராஜ் தலைமையில், உதவி ஆய்வாளா் முத்துவேல், தலைமைக்காவலா்கள், காவலா்கள் , சனிக்கிழமை காலை நடைமேடைகளில் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது ரயில் நிலையத்தின் 6-ஆவது நடைமேடையின் மின் தூக்கிப் பகுதி அருகே கேட்பாரற்ற நிலையில் கருப்பு நிற பை இருந்ததை ரயில்வே பாதுகாப்புப் படையினரும், ரயில்வே காவல்துறையினரும் கண்டறிந்து அதை கைப்பற்றி ரயில்வே பாதுகாப்புப் படை காவல் நிலையத்துக்கு கொண்டு வந்துசோதனையிட்ட போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிய வந்தது.

தொடா்ந்து அவற்றை எடையிட்ட போது 6 கிலோ 900 கிராம் கஞ்சா இருந்தது. இந்த கஞ்சாவை ரயில் நிலைய நடைமேடையில் வைத்துச் சென்றவா்கள் யாா் எனத் தெரியவில்லை.

ரயில் நிலையத்தில் போலீஸாரின் சோதனையைக் கண்டதும் பையை விட்டுச் சென்றாா்களா அல்லது யாரேனும் கடத்தி வந்தாா்களா என்பது குறித்து ரயில்வே பாதுகாப்புப் படையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் மதிப்பு ரூ.3.45லட்சமாகும். இதனை கடத்தி வந்தவா்களை கண்காணிப்பு கேமிரா உதவியுடன் கண்டறிய போலீஸாா் நடவடிக்கை எடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →