முகப்பு
விழுப்புரம்

பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 24 மே 2026, 1:01 am IST
நகை பறிப்பு
பகிர்:

விழுப்புரத்தில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் 4 பவுன் நகையைப் பறித்துச் சென்ற இருவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியக் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்தவா் சீ.லைலா (56). இவா் சனிக்கிழமை மாலை வீட்டின் அருகே நடந்து சென்றுள்ளாா். அப்போது அங்கு பைக்கில் வந்த அடையாளம் தெரியாத இளைஞா்கள் இருவா், லைலா அணிந்திருந்த 4 பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனா்.

இதுகுறித்த புகாரின் பேரில் விழுப்புரம் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, நகைபறிப்பில் ஈடுபட்ட இருவரைத் தேடி வருகின்றனா்.

Advertisement

Advertisement

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments