முகப்பு
கடலூர்

விவசாயக் கடனுக்கு ரூ.4,500 கோடி

கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க தமிழக முதல்வர் ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பி

Updated On : 13 மே 2013, 12:28 am IST
பகிர்:

கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்க தமிழக முதல்வர் ரூ.4,500 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளார் என நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் பேசினார்.

பண்ருட்டி ஒன்றியம், சிலம்பிநாதன்பேட்டை ஊராட்சி பத்திரக்கோட்டை கிராமத்தில் உழவர் பெருவிழா சனிக்கிழமை நடந்தது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நெய்வேலி சட்டப்பேரவை உறுப்பினர் எம்.பி.எஸ்.சிவசுப்ரமணியன் பேசியது:  விவசாய உற்பத்தியை 2, 3 மடங்கு உயர்த்த வேண்டும், உணவுப் பொருள் உற்பத்தியை அதிகரிப்பதற்காக இந்தியாவில் குஜராத், தமிழ்நாடு ஆகிய இரு மாநிலத்தில்தான் உழவர் பெருவிழா நடத்தப்படுகிறது.

Advertisement

Advertisement

 கூட்டுறவுச் சங்கத்தின் மூலம் விவசாயிகளுக்கு கடன் வழங்குவதற்காக ரூ.4,500 கோடியை தமிழக முதல்வர் ஒதுக்கீடு

செய்துள்ளார்.

எதிர்கால சந்ததியினரை காக்க வேண்டுமானால் மரங்களை நடவேண்டும், தண்ணீர் மற்றும் மின்சாரத்தை சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

பின்னர் விவசாயிகளுக்கு ஸ்பிரேயர், விதை, வீரிய ரக மரக்கன்றுகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ஊராட்சி மன்றத் தலைவர் வி.ரகுராமன் தலைமை தாங்கினார். வேளாண்மை உதவி இயக்குநர் சங்கர் முன்னிலை வகித்தார். பண்ருட்டி ஒன்றியச் செயலர் கமலக்கண்ணன், மாவட்ட கவுன்சிலர் கே.தேவநாதன், கடலூர் விற்பனைக் குழுச் செயலர் ஹரிதாஸ், தோட்டக்கலை அலுவலர் ரவிசேகர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேளாண்மை அலுவலர் சண்முகசுந்தரம் நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.