கடலூர்

ஆக்கிரமிப்பைக் கண்டித்து சாலை மறியல்

தினமணி

விருத்தாசலம் அருகே மயானம் ஆக்கிரமிப்பு தொடர்பாக அப்பகுதியினர் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 விருத்தாசலம் அருகே உள்ள பொன்னேரியில் ஆதிதிராவிடர்களுக்கான மயானம் உள்ளது. இந்த மயானத்தை அதேப் பகுதியைச் சேர்ந்த தனியார் ஒருவர் ஆக்கிரமித்ததாகத் தெரிகிறது. இதுகுறித்து இரு தரப்பினருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
 இந்த நிலையில், திங்கள்கிழமை ஆக்கிரமிப்பு தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பொதுமக்களை சிலர் தாக்கியதாகத் தெரிகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியினர் இந்திய ஜனநாய வாலிபர் சங்கத்தின் வட்டச் செயலர் கலைச் செல்வன் தலைமையில் சிதம்பரம்-விருத்தாசலம் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
 சம்பவ இடத்துக்கு வந்த விருத்தாசலம் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து மறியல் கைவிடப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

ஷஷாங் சிங்குக்கு பரிசளித்த எம்.எஸ்.தோனி!

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

உதகை, கொடைக்கானல் செல்வோர் கவனத்திற்கு: நள்ளிரவு முதல் இ-பாஸ் கட்டாயம்

SCROLL FOR NEXT