கடலூர்

வீட்டுக் கதவை உடைத்து 60 பவுன் நகைகள் திருட்டு

DIN

சிதம்பரம் அருகே வீட்டுக் கதவை உடைத்து 60 பவுன் நகைகள், வெள்ளிப் பொருள்கள் திருடப்பட்டன.
கடலூர் மாவட்டம், மேல்புவனகிரி ஈஸ்வரன் கோயில் தெருவில் வசிப்பவர் சுப்பிரமணியன் (58). புவனகிரியில் காலணி விற்பனையகம் வைத்துள்ளார். இவரது மனைவி தமிழரசி (52). இவர்களது 3 மகன்களுக்கும் திருமணம் முடிந்து வெளியூர்களில் வசித்து வருகின்றனர். ஆனால், 3 மருமகள்களின் நகைகளும் புவனகிரியில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததாம். சுப்பிரமணியனுக்கு உடல் நிலை சரியில்லாததால் அவர் தனது மனைவியுடன் வீட்டை பூட்டிவிட்டு, திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்த நிலையில் வியாழக்கிழமை நள்ளிரவு புவனகிரியில் உள்ள சுப்பிரமணியனின் வீட்டுக் கதவின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள், பீரோவிலிருந்த 60 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி நகைகள், பொருள்களை திருடிச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை காலை வீட்டுக் கதவு திறந்து கிடந்ததைப் பார்த்து அப்பகுதியினர் தமிழரசிக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்தில் சிதம்பரம் ஏஎஸ்பி என்.எஸ்.நிஷா விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து புவனகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ப்ளே ஆஃப்-க்குள் நுழையப்போவது யார்?

பாகிஸ்தான்: மினி டிரக் பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் பலி

ஔரங்கஷீப்பின் ஆன்மா காங்கிரஸுக்குள் புகுந்துவிட்டது: யோகி ஆதித்யநாத்

இந்திய மசாலாக்களுக்குத் தடை விதித்த நேபாளம்!

கடினமாக இருக்கிறது... கடைசி லீக் போட்டிக்குப் பிறகு ஹார்திக் பாண்டியா!

SCROLL FOR NEXT