கடலூர்

ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயிற்சி

தினமணி

அட்மா திட்டத்தின் கீழ் தானியம், சிறுதானியப் பயிர்கள் குறித்து விவசாயிகளுக்கான ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மைப் பயிற்சி முகாம் கீழ்கவரப்பட்டு கிராமத்தில் அண்மையில் நடைபெற்றது.
 பயிற்சிக்கு அண்ணாகிராமம் வேளாண்மை உதவி இயக்குநர் மல்லிகா தலைமை வகித்தார். அவர் பேசுகையில், பனிவரகு, திணை, சாமை, வரகு ஆகிய சிறுதானியங்களில் அதிகளவில் புரதம், தாது உப்புக்கள், நார்ச் சத்து ஆகியவை உள்ளன. சிறுதானியப் பயிர்கள் வறட்சியை தாங்கி வளரக்கூடியவை. குறைவான நீரைப் பயன்படுத்தி சிறுதானியங்களை எளிதில் சாகுபடி செய்யலாம் என்றார்.
 மேலும், சிறுதானியப் பயிர்கள் விதைப்பு முறை, களை கட்டுப்பாடு, நீர் நிர்வாகம், அறுவடைக்கு பிந்தைய தொழில்நுட்பம் குறித்து வேளாண்மை அலுவலர் சுரேஷ் விளக்கமளித்தார்.
 விதை நேர்த்தி, விதையால் பரவக்கூடிய நோய்கள், அவற்றை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து வட்டார தொழில்நுட்ப மேலாளர் அழகுமதி செயல்விளக்கம் அளித்தார். உதவி வேளாண்மை அலுவலர் சின்னதுரை, உதவி தொழில்நுட்ப மேலாளர் தண்டபாணி ஆகியோர் பயிற்சிக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்ஸ்டாவில் பகிராமல் கழித்த படங்கள்! சாக்க்ஷி மாலிக்...

பத்திரிகை சுதந்திர நாள்- முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

SCROLL FOR NEXT