கடலூர்

சத்திய ஞான சபையில் ஆவணி மாத ஜோதி தரிசனம்

DIN

வடலூர் சத்திய ஞான சபையில் சனிக்கிழமை நடைபெற்ற ஆவணி மாத ஜோதி தரிசன நிகழ்வில், சன்மார்க்க அன்பர்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
வடலூரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான சபையில் ஒவ்வொரு மாதமும் பூச நட்சத்திரத்தில் ஜோதி தரிசன விழா நடைபெற்று வருகிறது.
அதன்படி, ஆவணி மாத பூச நட்சத்திரத்தையொட்டி சனிக்கிழமை காலை தரும சாலையில் திருஅருள்பா முற்றோதல், அகவல் பாடப்பட்டது.
தொடர்ந்து பகல் 12 மணிக்கு ஞான சபையில் சிறப்புப் பூஜைகள் செய்து ஜோதி தரிசனம் நடைபெற்றது. பின்னர் இரவு 7.45 மணி முதல் 8.45 மணி வரை 6 திரைகளை நீக்கி சிறப்பு ஜோதி தரிசனம் நடைபெற்றது.
இதில், வடலூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் கலந்துகொண்டு ஜோதி தரிசனம் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆந்திரம்: ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங். பின்னடைவு!

அமேதியில் ஸ்மிருதி இரானி பின்னடைவு!

தில்லி: பாஜக முன்னிலை!

வயநாடு, ரேபரேலி - ராகுல் காந்தி தொடர்ந்து முன்னிலை!

வட சென்னை, வேலூரில் திமுக முன்னிலை!

SCROLL FOR NEXT