கடலூர்

மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு: திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகம் முற்றுகை 

தினமணி

வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து அரசியல் கட்சியினர், வணிகர் சங்கத்தினர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை கருப்புக் கொடிகளுடன் திங்கள்கிழமை முற்றுகையிட்டனர்.
 திட்டக்குடியை அடுத்துள்ள தி.இளமங்கலம் வெள்ளாற்றில் மணல் குவாரி அமைக்கும் நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது. இந்தப் பகுதியில் மணல் குவாரி அமைத்தால் குடிநீர்ப் பிரச்னை ஏற்படுவதோடு, விவசாயம் முற்றிலும் முடங்கிவிடும் எனவும், வெள்ளாற்றின் மூலம் செயல்படுத்தப்படும் கூட்டுக் குடிநீர்த் திட்டத்தால் பயன்பெறும் 65 கிராமங்களுக்கும் குடிநீர் கிடைக்காது என்றும், எனவே, மணல் குவாரி அமைக்கக் கூடாதென அப்பகுதியினர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர். இதுதொடர்பாக அண்மையில் திட்டக்குடி வட்டாட்சியர் தலைமையில் நடைபெற்ற சமாதானப் பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
 இதையடுத்து திட்டமிட்டபடி திங்கள்கிழமை பாட்டாளி மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், தமிழ் மாநில காங்கிரஸ், பாஜக, வணிகர் சங்கத்தினர் மற்றும் பொதுமக்கள் உள்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் திட்டக்குடி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அப்போது, மணல் குவாரிக்கு எதிராக முழக்கமிட்டனர். அதன்பின்னர், வட்டாட்சியர் ரவிச்சந்திரனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
 போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் தனபால், பாமக மாவட்டச் செயலர் இ.கே.சுரேஷ், மாநில செயற்குழு உறுப்பினர் வீரகோவிந்தன், மாநில இளைஞரணி துணைத் தலைவர் ரா.மோகன், ஒன்றியச் செயலர் அ.கண்ணன், தவாக ஒன்றியச் செயலர் ரெங்க.சுரேந்தர், மாவட்ட மகளிர் அணித் தலைவர் கற்பகம், நகர நிர்வாகிகள் முருகன், கதிரவன், அம்மா மக்கள் முன்னேற்றக் கழக ஒன்றியச் செயலர் அக்ரி.முருகேசன், நிர்வாகிகள் சுந்தரமூர்த்தி, கலையரசன், முருகன், பாஜக மாவட்டச் செயலர் பொன்.பெரியசாமி, நிர்வாகிகள் செல்வ.பூமிநாதன், சுரேஷ், தமாகா நிர்வாகி அன்பரசு, வணிகர்கள் சங்கப் பேரவை கூட்டமைப்பு மாநில துணைத் தலைவர் தங்கராசு, சண்முகம் செட்டியார், வளையாபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT