வயல் நீர் குழாய் முறைப் பாசனம்: விவசாயிகளுக்கு செயல் விளக்கம்
குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு வயல் நீர் குழாய் முறை பாசனம் (பாணி பைப்) குறித்த செயல் விளக்கம் (படம்) அண்மையில் அளிக்கப்பட்டது.
குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மையம் சார்பில், விவசாயிகளுக்கு வயல் நீர் குழாய் முறை பாசனம் (பாணி பைப்) குறித்த செயல் விளக்கம் (படம்) அண்மையில் அளிக்கப்பட்டது.
வயல் நீர் குழாய் முறையானது, தேவையறிந்து நீர் மேலாண்மை செய்யும் முறையாகும். இதன்மூலம் தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்த முடியும். குறிஞ்சிப்பாடி வேளாண்மை விரிவாக்க மைய வளாகத்தில், வேளாண்மை உதவி இயக்குநர் சின்னக்கண்ணு வயல் நீர் குழாய் பயன்பாடு குறித்த செயல் விளக்கத்தை உழவர் மன்ற விவசாயிகளுக்கு அளித்தார்.
நிகழ்ச்சியில் வேளாண்மை அலுவலர் தேவி கலாவதி, உதவி வேளாண்மை அலுவலர் தெய்வசிகாமணி, முன்னோடி விவசாயி சிவராமசேது, ஆர்.கே.ராமலிங்கம், செல்வம், கண்ணன், குப்புசாமி, ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.