கடலூர்

சரநாராயணப் பெருமாள் கோயிலில்ய் அத்யயன மஹோத்ஸவம்  இன்று தொடக்கம்

DIN

பண்ருட்டி, திருவதிகையில் அமைந்துள்ள ஹேமாம்புஜ நாயகி சமேத சரநாராயணப்  பெருமாள் கோயிலில், அத்யயன மஹோத்ஸவம் சனிக்கிழமை (டிச.8) தொடங்கி 27-ஆம் தேதி வரை மொத்தம் 20 நாள்களுக்கு நடைபெற உள்ளது.
இதில், முதல் 10 நாள்கள் "திருமொழித்திருநாள் (பகல்பத்து)', அடுத்த 10 நாள்கள் "திருவாய்மொழித் திருநாள்(இராப்பத்து)' உத்ஸவமாக நடைபெற உள்ளது.
உத்ஸவத்தின் சிறப்பு அம்சமாக வருகிற 18-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5.30 மணியளவில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு ஸ்ரீபரமபதவாசல் (சொர்க்கவாசல்) திறப்பு நிகழ்வு நடைபெறும். 
ஜன.1-ஆம் தேதி ஆங்கிலப் புத்தாண்டு அன்று மூலவர் பெரிய பெருமாள் முத்தங்கி சேவையில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT