கடலூர்

பைக்கா விளையாட்டுப் போட்டி

DIN

கிராம மக்களிடம் விளையாட்டு ஆர்வத்தைத் தூண்டும் வகையில் ஆக்கனூரில் பைக்கா விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
 தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், மங்களூர் ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஆக்கனூர் ஊராட்சியில் அண்மையில் நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியின் தொடக்க விழாவில் மங்களூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கி.ஊ) ஜெயக்குமாரி தலைமை வகித்தார். ஊராட்சிமன்ற முன்னாள் தலைவர்கள் குமாரசாமி, இந்திராகாந்தி அன்பழகன், கீதா திருநீலகண்டன், முன்னாள் கவுன்சிலர் செல்லமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
 ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டிகளை தொடக்கிவைத்தார்.
 ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் இளங்கோவன், ஓய்வுபெற்ற உடல்கல்வி ஆய்வாளர் சாமிதுரை பங்கேற்று சிறப்புரையாற்றினர். கிராம பிரமுகர்கள் கருணாநிதி, மலர்காமராஜ், ஆறுமுகம், ராமசாமி, தியாகராஜன், அழகுவேல், ஊர்நல அலுவலர் பூபதி உள்பட பலர் பங்கேற்றனர். ஊராட்சிச் செயலர் கண்ணன் வரவேற்றார். குண்டு எறிதல், ஓட்டப்பந்தயம், வட்டு எறிதல் உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
 இளைஞர்கள், பொதுமக்கள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT