திருவதிகையில் அமைந்துள்ள ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை ரதஸப்தமி உற்சவம் நடைபெற உள்ளது.
அன்று காலை 6 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருவாராதனம், 9 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி உற்சவம் மற்றும் விசேஷ திருமஞ்சனம் நடைபெறுகிறது. தொடர்ந்து, காலை 10 மணிக்கு திருக்குளத்தில் தீர்த்தவாரியும், தொடர்ந்து மாலை 6 மணிக்கு ஸ்ரீதேவி, பூமிதேவி சமேத ஸ்ரீ சரநாராயணப் பெருமாள் விசேஷ மேளக் கச்சேரியுடன் உள்புறப்பாடும் நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.