ஓய்வூதியர்கள் சங்கக் கூட்டம்
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
தமிழ்நாடு ஓய்வூதியர்கள் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயற்குழுக் கூட்டம் மாவட்டத் தலைவர் ந.பாண்டியன் தலைமையில் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
மாநில துணைத் தலைவர் கோ.கலியபெருமாள் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட சங்க நிர்வாகிகள் தேர்தலை நடத்துவது, சங்க நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சங்கத்தை மேலும் வலுப்படுத்துவது. ஓய்வூதியர், குடும்ப ஓய்வூதியர்களுக்கான புதிய காப்பீட்டு திட்டத்தில் அனைவருக்கும் நன்மை பயக்கும் வகையில் அரசாணை வெளியிட அரசை வலியுறுத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் நிர்வாகிகள் இர.சுந்தரமூர்த்தி, த.வேணுகோபால், சந்தானராஜ், பி.முனுசாமி, இளங்கோமணி, குமாரமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாவட்டச் செயலர் த.கண்ணன் வரவேற்றார். நிர்வாகி எஸ்.சண்முகம் நன்றி கூறினார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.