கடலூர்

கடல் சீற்றம்: கடலூரில் மீன்பிடித் தொழில் பாதிப்பு

தினமணி

கடல் சீற்றம் காரணமாக, கடலூர் மாவட்டத்தில் மீன்பிடித் தொழில் செவ்வாய்க்கிழமை பாதிக்கப்பட்டது.
 தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியானது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியுள்ளது. இதனால், கடல் சீற்றமாகக் காணப்படும், பலத்த மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 இதன்படி, கடலூர் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை கடல் சீற்றத்துடன் காணப்பட்டது. கடல் அலைகள் 1.5 மீட்டருக்கும் அதிகமாக எழும்பியது. இதனால், பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை. மாவட்டத்திலுள்ள 49 மீனவ கிராமங்களில் சுமார் 15 ஆயிரம் மீன்பிடி படகுகள் கடற்கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இதனால் மீனவர்கள் வலை, படகுகளை பழுதுபார்த்தல், பராமரித்தல் பணிகளில் ஈடுபட்டனர். கடந்த இரு நாள்களாக கடல் சீற்றத்துடன் காணப்படுவதால் மீன்பிடித் தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
 கடலூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு மழை பெய்தது. செவ்வாய்க்கிழமை பகலில் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்தது.
 இதே நிலை வருகிற 15-ஆம் தேதி வரை நீடிக்குமென வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

1, 2, 3, 4... உங்களுக்குப் பிடித்த படம் எது? சாக்க்ஷி அகர்வால்

காங்கிரஸ் - பாகிஸ்தான் தொடர்பு வெளிச்சத்துக்கு வந்தது: பிரதமர் மோடி

‘தள்ளுமாலா’ இயக்குநர் படத்தில் பிரேமலு நாயகன்!

SCROLL FOR NEXT