கடலூர்

வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா

DIN

பண்ருட்டி, திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோயிலில் கார்த்திகை மாத முதல் சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் சோமவார வழிபாடு சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டுக்கான கார்த்திகை மாத முதல் சோமவார விழா திங்கள்கிழமை நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, காலை 11 மணியளவில் பஞ்ச மூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்றது. பிற்பகல் 3 மணியளவில் வீரட்டானேஸ்வரருக்கு 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது.  தொடர்ந்து மாலை 6 மணிக்கு வீரட்டானேஸ்வரர் நாகாபரத்துடன் புஷ்ப அலங்காரத்திலும், பெரியநாயகி அம்பாள் வெள்ளி அங்கியுடன் புஷ்ப அலங்காரத்திலும் காட்சியளித்தனர். இரவு 8 மணியளவில் சோட சோபசார தீபாராதனை நடைபெற்றது. பின்னர், பெரியநாயகி சமேத வீரட்டானேஸ்வரர் வெள்ளி ரிஷப வாகனத்தில் சிறப்பு அலங்காரத்தில் மாட வீதியில் வலம் வந்தார். திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மொரீஷியஸில் இளையராஜா: வைரல் புகைப்படம்!

உருவகேலி செய்யாதீர்கள்: 2 ஆண்டுகளாக நோயுடன் போராடும் மலையாள நடிகை!

இடுக்கி நீர்மட்டம் 35% ஆக குறைவு! வறட்சியின் விளிம்பில்...

ரூ.4 கோடி பறிமுதல்: நயினார் நாகேந்திரனின் உறவினர் உள்பட 2 பேர் விசாரணைக்கு ஆஜர்!

இயக்குநருடன் வாக்குவாதம்.. படப்பிடிப்பை நிறுத்திய சௌந்தர்யா ரஜினிகாந்த்?

SCROLL FOR NEXT