கடலூர்

வேலை கிடைக்காததால் விரக்தி: பட்டதாரி இளைஞர் தற்கொலை

DIN


வேலை கிடைக்காத விரக்தியில் பொறியியல் பட்டதாரி இளைஞர் சனிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டார்.
திட்டக்குடி முக்களத்தி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ராமமூர்த்தி. ஓய்வுப்பெற்ற கரும்பு ஆய்வாளர். இவரது மனைவி சிவகங்கை, அரசுப் பள்ளி ஆசிரியை. இவர்களுடைய மகன் முருகன் (29) . பொறியியல் பட்டதாரியான இவர், படிப்பு முடித்து 5 ஆண்டுகளாக வேலைக்கிடைக்காமல் மனமுடைந்த நிலையில் இருந்தாராம். அக்கம்பக்கத்தில் யாரிடமும் பேசாமல் தனிமையில் இருந்துள்ளார்.
இந்த நிலையில், முருகன் சனிக்கிழமை மதியம் வீட்டில் யாரும் இல்லாதபோது தனது உடலில் பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். வீட்டின் கதவு உள்புறம் பூட்டப்பட்ட நிலையில், வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதுகுறித்து அந்தப் பகுதியினர் திட்டக்குடி தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து தீயணைப்பு துறையினர், திட்டக்குடி காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்பொழுது கருகிய நிலையில் முருகன் சடலமாகக் கிடந்தார்.
முருகன் பிளஸ்-2 தேர்வில் 1,122 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். அவருக்கு மருத்துவக் கல்லூரியில் படிக்க இடம் கிடைத்தும், பொறியியல் படிக்க வேண்டுமன்ற ஆசையில் பட்டப் படிப்பை முடித்தவர் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பூஜையின் பயன்கள்!

‘வானம்’ ஜாஸ்மின்!

ராகுல் காந்தி, லாலு யாதவ் போட்டியிடுவதை தடுக்க முடியாது: உச்ச நீதிமன்றம்

விரும்பியது அருளும் அட்சயபுரீசுவரர்

சுனில் நரைன் கொல்கத்தாவின் சூப்பர் மேன்: ஷாருக்கான்

SCROLL FOR NEXT