கடலூர்

ஜி.கே.மூப்பனார் நினைவு தினம்: த.மா.கா.வினர் அன்னதானம்

ஜி.கே. மூப்பனாரின் 18-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.

DIN

ஜி.கே. மூப்பனாரின் 18-ஆவது ஆண்டு நினைவு தினத்தையொட்டி, சிதம்பரம் நகர தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் அன்னதானம் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டது.
 சிதம்பரம் மேலவீதி மணிக்கூண்டு அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு நகரத் தலைவர் தில்லை.ஆர்.மக்கீன்  தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜெமினி எம்.என்.ராதா வரவேற்றார். மாவட்ட இளைஞரணி தலைவர் கே.ரஜினிகாந்த், மாவட்ட தொண்டர் அணித் தலைவர் கோ.குமார், மாவட்ட துணைத் தலைவர்கள் ராஜா சம்பத்குமார், கே.நாகராஜ், மாவட்ட மகளிரணித் தலைவர் கே.ராஜலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலர் ஏ.எஸ்.வேல்முருகன், மூப்பனார் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து 500 பேருக்கு அன்னதானம் வழங்கினார்.
 நிகழ்ச்சியில் நகர தமாகா துணைத் தலைவர்கள் ஆர்.சம்பந்தமூர்த்தி, ஜி.ஆறுமுகம், எஸ்.எஸ்.நடராஜ், பொதுச் செயலர் டி.பட்டாபிராமன், மாநில எஸ்சி, எஸ்டி பிரிவு பொதுச் செயலர் எம்.கே. பாலா,  நகர இளைஞரணி தலைவர் துரை.சிங்காரவேலு, மாவட்டச் செயலாளர்  தில்லைச் செல்வி, இளைஞர் அணி செயலர் சாய், நகர மகளிர் அணி நிர்வாகிகள் மீனாசெல்வம், இளைஞரணி மாவட்ட செயலர் ராதா உள்ளிட்டோர் பங்கேற்றனர். மாவட்ட இளைஞரணி செயலர் என் .கணேஷ் நன்றி கூறினார்.  
மேலும் சிதம்பரம் மந்தகரை செல்லியம்மன் கோயில் அருகே ஜி.கே.மூப்பனார் உருவப் படம் மலர் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது. 100 பேருக்கு அரிசி, 500 பேருக்கு அன்னதானம் 
வழங்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பங்குச் சந்தை எழுச்சி: சென்செக்ஸ் 447 புள்ளிகள் உயர்வுடன் நிறைவு!

அதிபர் டிரம்ப்பின் கிறிஸ்துமஸ் விருந்தில் பிரபல பாலிவுட் நடிகை!

மார்கழி வழிபாடு: திருப்பாவை, திருவெம்பாவை - பாசுரம் 5

உலகத் தரத்தில் VFX காட்சிகள்! ஆனால் கதை? - AVATAR 3 திரைவிமர்சனம்

தி​ரு​மண பாக்​கி​யம் அரு​ளி​டும் திரு​மால்

SCROLL FOR NEXT