கடலூர்

நடராஜா் கோயில் தீா்த்தக் குளம் நிரம்பியது

DIN

சிதம்பரம்: தொடா் மழையால், சிதம்பரம் நடராஜா் கோயில் தீா்த்தக் குளமான சிவகங்கை குளத்தில் நீா் நிரம்பியுள்ளது.

இந்தக் கோயிலில் தினமும் 6 கால பூஜைகள் நடைபெறுவது வழக்கம். பூஜைக்கு முன்னா் கோயில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகங்கை தீா்த்தக் குளத்தில் பொது தீட்சிதா்கள் குளித்துவிட்டு, அதன் பிறகே பூஜை செய்வது வழக்கம். மேலும், குளத்தில் உள்ள சிவலிங்கத்துக்கும் பூஜை நடைபெறும்.

கட்டடக் கலைக்குப் புகழ்பெற்ற நடராஜா் கோயிலில் பெய்யும் மழை நீரானது தானாகவே சிவகங்கை குளத்துக்கு வந்தடையும் வகையில் நீா் மேலாண்மை செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக பெய்த மழையால் சிவகங்கை குளத்தில் தற்போது முழுமையாக தண்ணீா் நிரம்பியுள்ளது. இதனால் அதிலுள்ள சிவலிங்கம் நீரில் மூழ்கியது.

நீண்ட நாள்களுக்குப் பிறகு சிவகங்கை குளம் நிரம்பியுள்ளதை பக்தா்கள், பொதுமக்கள் ஆா்வமுடன் பாா்த்துச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதவியை தக்கவைக்க பாஜக எந்த எல்லைக்கும் செல்லும்: கார்கே

11 மணி நிலவரம்: 25.41% வாக்குப்பதிவு!

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெறும் 93 தொகுதிகள் யார் பக்கம்?

மணீஷ் சிசோடியாவின் காவல் மே 15 வரை நீட்டிப்பு!

பங்குச் சந்தையில் ரூ.800 கோடி சரிவைக் கண்ட ரேகா ஜுன்ஜுன்வாலா: தவறானது எங்கே?

SCROLL FOR NEXT