கடலூர்

விலையில்லா சைக்கிள் வழங்கும் விழா

DIN


சிதம்பரம் அண்ணாமலைநகர் ராணி சீதை ஆச்சி மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு அரசின் விலையில்லா சைக்கிள்கள் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் பாஸ்கரன் தலைமை வகித்தார். முன்னாள் நகர்மன்ற தலைவர் எம்.எஸ்.என்.குமார், முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் ஆர்.செந்தில்குமார், மாவட்ட இளைஞரணி இணைச் செயலர் முருகையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் விநாயகம் வரவேற்றார். 
விழாவில் சிறப்பு அழைப்பாளராக சிதம்பரம் சட்டப் பேரவைத் தொகுதி உறுப்பினர் கே.ஏ.பாண்டியன் பங்கேற்று 292 மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா சைக்கிள்களை வழங்கிப் பேசினார். மேலும், தலைமை ஆசிரியரின் கோரிக்கைப்படி பள்ளியில் கண்காணிப்பு கேமரா பொருத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எம்எல்ஏ கூறினார். 
விழாவில் சிவபுரி கூட்டுறவு சங்கத் தலைவர் சுந்தரமூர்த்தி, தங்க.கோபால், வி.கே.செல்வராஜ், சேகர், கிள்ளை விஜயன், தன.ஜெயராமன், நாஞ்சலூர் மணி, ரங்கம்மாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். உதவி ஆசிரியர் பெர்லின் வில்லியம் நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்புகள் நடத்தக்கூடாது- பள்ளிக் கல்வித்துறை

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

‘விசில் போடு’ 5 கோடி பார்வைகள்..

நடிகர் விஜய்யின் நிஜ வாழ்க்கை சம்பவம் ‘ஸ்டார்’ படத்துக்கு உத்வேகம்!

சட்டப் படிப்புகளுக்கு மே 10 முதல் விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT