கடலூர்

தவாக கலந்தாய்வுக் கூட்டம்

சிதம்பரம் அருகே குமராட்சி பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டட வளாகத்தில் குமராட்சி ஒன்றிய தமிழக

DIN

சிதம்பரம் அருகே குமராட்சி பிரதான சாலையில் உள்ள தனியார் கட்டட வளாகத்தில் குமராட்சி ஒன்றிய தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் கலந்தாய்வுக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்தில், ஒன்றிய இளைஞரணிச் செயலர் சுகுமார் வரவேற்றார் ஒன்றியச் செயலர் கே.ஆர்.ஜி.தமிழ்வாணன்  தலைமை வகித்தார். 
ஒன்றியத் தலைவர் சுந்தரமூர்த்தி, துணைச் செயலர் அறிவழகன், துணைத் தலைவர் தமிழ்ச்செல்வன், இளைஞரணித் தலைவர் பிரபு, செயற்குழு உறுப்பினர் ரமேஷ், மாணவரணி தலைவர் கமலக்கண்ணன், மாணவரணிச் செயலர் சபரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலர் மு.முடிவண்ணன் 
கட்சியின் புதிய உறுப்பினர் படிவத்தை வழங்கி சிறப்புரையாற்றினார். கூட்டத்தில் சிவா, வினோத்,  அருணாசலம், ராமர், பரத், காளிதாஸ்  உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 கூட்டத்தில், குமராட்சி ஒன்றியத்தில் உள்ள கட்சியின் அனைத்து கிளைகளிலும் புதிய கொடியை ஏற்றுவது, புதிய உறுப்பினர்களை கட்சியில் இணைப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. 
நகரச் செயலர் ராஜாராமன் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

விவசாயத் தொழிலாளா்கள் ஆா்ப்பாட்டம்

SCROLL FOR NEXT