கடலூர்

சாராயம் கடத்தல்: ஒருவர் கைது

DIN

கடலூர் அருகே காரில் சாராயம் கடத்தியவரை போலீஸார் செவ்வாய்க்கிழமை கைது செய்தனர்.
 கடலூர் மதுவிலக்கு பிரிவு உதவி ஆய்வாளர் சு.பிரசன்னா, தலைமைக் காவலர் ஜ.ஜெஸ்டின் பிரபாகரன் உள்ளிட்டோர் மதுக் கடத்தலை தடுக்கும் வகையில் ரோந்துப் பணியில்
 செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர். அப்போது, உச்சிமேட்டில் சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றுகொண்டிருந்த காரை சோதனையிட்டனர். அதில், 20 சாக்கு மூட்டைகளில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள 1,200 லிட்டர் புதுவை மாநில சாராயம் இருந்தது தெரியவந்தது.
 அந்தக் காரிலிருந்த புதுவை, அரியாங்குப்பத்தைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிகண்டன் (36) என்பவரை போலீஸார் கைது செய்தனர். மேலும், கடத்தல் சாராயம், காரை போலீஸார் பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியில் ஆம் ஆத்மி, காங். பெரும் பின்னடைவு..!

மணிப்பூரில் காங்கிரஸ் முன்னிலை!

2019 மாடலை தொடரும் திமுக, காங்கிரஸ்? ஆந்திரம், கர்நாடகத்தில் தேஜகூ!!

கோவை விமான நிலையத்தில் சி.ஐ.எஸ்.எப். காவலர் சுட்டுத் தற்கொலை!

உத்தரகாண்டில் அனைத்து தொகுதிகளிலும் பாஜக முன்னிலை

SCROLL FOR NEXT