கடலூர்

வண்டிப்பாளையத்தில் தேரோட்டம்

DIN

கடலூர் புதுவண்டிப்பாளையத்தில் செங்குந்த மரபினருக்கு சொந்தமான அருள்மிகு வள்ளிதேவசேனா சமேத அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலின் பங்குனி உத்திர கொடியேற்ற விழா 12 ஆம் தேதி நடைபெற்றது.
 விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் வள்ளிதேவசேனா சமேதராக சிவசுப்பிரமணிய சுவாமி எழுந்தருளினார். முக்கிய வீதிகள் வழியாக தேரோட்டம் நடைபெற்றது. தொடர்ந்து, திருத்தேர் நிலையை அடைந்த பின்னர், படிபூஜை செய்யப்பட்டு உற்சவர்கள் கோயிலினுள் எழுந்தருளினர். பின்னர் சிறப்பு பூஜை நடத்தப்பட்டு இரவில் மகா அபிஷேக ஆராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
 வியாழக்கிழமை காவடி எடுக்கும் நிகழ்ச்சியும், பங்குனி உத்திர சிறப்பாக மதியம் 108 சங்கு பூஜை, யாகசாலை, கலச பூஜைகளும் நடைபெறுகின்றன. இரவில் கொடியிறக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

3-ஆம் கட்ட வாக்குப்பதிவு நிறைவு!

25,000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT