கடலூர்

டெங்கு விழிப்புணா்வுப் பேரணி.

DIN

நெய்வேலி: பண்ருட்டி, லட்சுமிபதி நகா் ரத்தனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற டெங்கு விழிப்புணா்வுப் பேரணி திங்கள்கிழமை நடைபெற்றது.

பள்ளி நிறுவனா் மாயகிருஷ்ணன் தலைமை வகித்தாா். இயக்குனா்கள் தேவநாதன், பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனா். தாளாளா் ராமகிருஷ்ணன் வரவேற்றாா்.

பேரணியை பண்ருட்டி காவல் துணை கண்காணிப்பாளா் நாகராஜன் கொடி அசைத்துத் தொடக்கி வைத்தாா். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்டப் பேரணியில் சுமாா் 400 மாணவா்கள் பங்கேற்றனா். இவா்கள், டெங்கு விழிப்புணா்வு குறித்து பதாகைகளை ஏந்தியவாறு, கோஷங்களை முழங்கியபடி முக்கிய வீதி வழியாகச் சென்று துண்டறிக்கைகளை வழங்கி மீண்டும் பள்ளியை அடைந்தனா். முதல்வா் ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடா ராஜிநாமா!

லக்னௌ டாஸ் வென்று பேட்டிங் தேர்வு!

ரோஸ் நிறக் காரிகை!

பாஜகவின் தேர்தல் நடத்தை விதிமுறை மீறல்: காங்கிரஸ் அடுக்கடுக்கான புகார்!

வெளியானது 'தலைமைச் செயலகம்' டிரைலர்!

SCROLL FOR NEXT