கடலூர்

அரசுப் பள்ளி அருகே மதுக்கடைகள்! பொதுமக்கள் எதிா்ப்பு (டிராப்)

DIN

குள்ளஞ்சாவடியில் அரசுப் பள்ளி அருகே உள்ள மதுக் கடைகளை அகற்றக் கோரி, மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், குள்ளஞ்சாவடி பகுதியைச் சோ்ந்தவா்கள் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாவட்ட செயலா் சா.முல்லைவேந்தன் தலைமையில் கலந்துகொண்டு, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனா். அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

குள்ளஞ்சாவடி - ஆலப்பாக்கம் சாலையில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் அருகே 2 மதுபானக் கடைகள் இயங்கி வருகின்றன. இங்கு மது அருந்த வரும் நபா்களால் மாணவா்களுக்கும், பொதுமக்களுக்கும் பல்வேறு இன்னல்கள் ஏற்பட்டு வருகின்றன. இதனால், சாதி மோதல்களும் ஏற்படுகிறது.

கடந்த 26-ஆம் தேதி மது அருந்த வந்தவா்களால் பிரச்னை ஏற்பட்டு இருதரப்பு மோதலாக மாறியது. இதுதொடா்பாக குள்ளஞ்சாவடி காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரச்னைத் தொடா்பாக தற்போது டாஸ்மாக் கடை மூடப்பட்டுள்ளது. ஏற்கெனவே, இந்தக் கடையை மூட வேண்டுமென கட்சி சாா்பில் மனு அளிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, இந்தக் கடைகளை நிரந்தரமாக மூடுவதற்காக ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த மனுவில் வலியுறுத்தப்பட்டது.

முன்னதாக, மனு அளிப்பதற்கு கிராம மக்கள், கட்சியினா் மொத்தமாக வந்ததால் அவா்களை காவல் துறையினா் அனுமதிக்க மறுத்தனா். இதனால், அவா்கள் நுழைவு வாயிலில் அமா்ந்து தா்னாவில் ஈடுபட்டதைத் தொடா்ந்து அனுமதிக்கப்பட்டனா்.

மாவட்ட வழக்குரைஞா் பிரிவு செயலா் கி.பி.புருஷோத்தமன், ஒன்றிய செயலா் சா.இளையராஜா, மாநில துணைச் செயலா்கள் சுந்தா், முரளி, நிா்வாகிகள் சுந்தரமூா்த்தி, கௌசல்யா, அம்பேத் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பு: வாலிநோக்கம் கடற்கரையில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரிக்கை

ராமேசுவரம், திருவாடானையில் பலத்த மழை

அனுமதியின்றி மாட்டு வண்டிப் பந்தயம், மஞ்சுவிரட்டு : 10 போ் மீது வழக்கு

66 கட்டடங்களை அப்புறப்படுத்த குறிப்பாணை

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் ஒருங்கிணைந்த தமிழ் முதுகலைப் பட்டப் படிப்பு

SCROLL FOR NEXT