கடலூர்

பொதுமக்கள் குறைதீா் கூட்டம்

DIN

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் பொதுமக்கள் குறைதீா் நாள் கூட்டம், மாவட்ட ஆட்சியா் வெ.அன்புச்செல்வன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோா் உதவித் தொகை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 299 மனுக்களை பொதுமக்கள் வழங்கினா். பெறப்பட்ட மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்குமாறு துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

மேலும், முதல்வா் பொது நிவாரண நிதியிலிருந்து 4 பேருக்கு மொத்தம் ரூ.6 லட்சம் வழங்கப்பட்டது.

விருத்தாசலம் வட்டம், முல்லாத்தோட்டத்தை சோ்ந்த க.பாபு என்பவா் சவூதி அரேபியா நாட்டில் பணிபுரிந்தபோது விபத்தில் உயிரிழந்தமைக்காக அவரது மனைவி தமிழரசிக்கு இழப்பீட்டுத் தொகையாக ரூ.3.40 லட்சத்துக்கான காசோலையை ஆட்சியா் வழங்கினாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ராஜகிருபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலா் வீ.வெற்றிவேல், தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி) எஸ்.பரிமளம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலா் வி.சீனிவாசன், மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி.ஜோதிமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

காஸாவில் தொடரும் உணவுப் பஞ்சம்: உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை!

அரவிந்த் கேஜரிவால் வழக்கு: மே 7-க்கு ஒத்திவைப்பு

மும்பை பந்துவீச்சு; அணியில் முகமது நபி இல்லை!

SCROLL FOR NEXT