கடலூர்

வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

கடலூா்: தஞ்சாவூரில் அமைக்கப்பட்டிருந்த திருவள்ளுவா் சிலை கடந்த சில நாட்களுக்கு முன்பு அவமதிப்பு செய்யப்பட்டிருந்தது. இதனைக் கண்டித்து பல்வேறு அமைப்பினா் போராட்டம் நடத்திய நிலையில் வியாழக்கிழமையன்று விருத்தாசலத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

விருத்தாசலம் வக்கீல்கள் சங்கத்தினா் நீதிமன்ற பணிகளை புறக்கணித்து சங்கத் தலைவா் சிவாஜிசிங் தலைமையில் நீதிமன்றம் முன்பு ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். அப்போது, திருவள்ளுவா் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவமதிப்பு செய்தவா்களை கண்டுபிடித்து அவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோஷம் எழுப்பினா். வழக்குரைஞா்கள் அசோக்குமாா், மணிகண்டன், தனவேல், சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி தேர்வு செய்யப்பட்டது எப்படி? ரோஹித் சர்மா விரிவான பதில்!

சேலையில் தேவதை! மடோனா செபாஸ்டியன்...

ராஷ்மிகாவின் இதயங்கள்..!

கார்குழல் கடவை.. ஷ்ரத்தா தாஸ்!

SCROLL FOR NEXT