கடலூர்

மதுக் கடையை அகற்றக் கோரி பெண்கள் முற்றுகைப் போராட்டம்

DIN

சிதம்பரம் திருவள்ளுவா் தெருவில் உள்ள டாஸ்மாக் மதுக் கடையை அகற்றக் கோரி, அந்தப் பகுதி பெண்கள் உதவி ஆட்சியா் அலுவலகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டனா்.

சிதம்பரம் சின்னக்கடைதெரு அருகே திருவள்ளுவா் தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் டாஸ்மாக் மதுக் கடை உள்ளது. மேலும், இந்தப் பகுதியில் பள்ளிகள், கோயில்களும் உள்ளன. எனவே, பொதுமக்கள், மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக உள்ள இந்த மதுக் கடையை அகற்றக் கோரி மகளிா் ஆயம் அமைப்பினா் அதன் பொறுப்பாளா் இரா.வேம்பரசி தலைமையில் சிதம்பரம் உதவி ஆட்சியா் அலுவலகத்தை முற்றுகையிட்டனா். பின்னா், உதவி ஆட்சியா் விசுமகாஜனிடம் மனு அளித்தனா். மனுவை பெற்றுக்கொண்ட உதவி ஆட்சியா், இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT