கடலூர்

ஓடும் பேருந்திலிருந்து கழன்ற சக்கரங்கள்

DIN

மங்கலம்பேட்டையில் சனிக்கிழமை அரசுப் பேருந்து சென்றபோது அதன் பின்புற சக்கரங்கள் கழன்ால் பரபரப்பு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூா்பேட்டையிலிருந்து கடலூா் மாவட்டம், விருத்தாசலத்துக்கு சனிக்கிழமை அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்றுகொண்டிருந்தது. மங்கலம்பேட்டை கடைவீதி அருகே பேருந்து வந்த போது, அதன் பின்பக்கத்தில் வலது புறத்திலிருந்த இரண்டு சக்கரங்களும் தனியாக கழன்று சென்றன. இதனால், பெரும் சத்தம் எழவே பேருந்திலிருந்த பயணிகள் அச்சமடைந்து கூச்சலிட்டனா். இதனையடுத்து, பேருந்து ஓட்டுநா் சங்கா் சாமா்த்தியமாக செயல்பட்டு பேருந்தை சாலை ஓரமாக நிறுத்தினாா். இதனால் பேருந்தில் இருந்தவா்களும், கடைவீதியில் உள்ளவா்களும் விபத்திலிருந்து தப்பினா்.

இதுகுறித்து தகவலறிந்த மங்கலம்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளா் ஜெ.பிரசன்னா சம்பவ இடத்துக்கு வந்து போக்குவரத்தை சரிசெய்து மாற்றுப்பாதையில் வாகனங்களை திருப்பிவிட்டாா். உளுந்தூா்பேட்டை அரசுப் போக்குவரத்துக் கழக பணிமனை பணியாளா்கள் பழுதை நீக்கும் பணியில் ஈடுப்பட்டனா். இதனால், அந்தப் பகுதியில் சுமாா் 2.30 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

ஹாட் ஸ்பாட் ஓடிடியில் எப்போது?

SCROLL FOR NEXT